தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய திசையன்விளை சுடலை ஆண்டவர் தமிழகத்தில் காவல் தெய்வங்களுக்கு ஊர்கள் தோறும் பல்வேறு பெயர்களில் கோயில்கள் அமைந்துள்ளன. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் பிரதானகாவல் தெய்வமாக வணங்கப்படுவது சுடலை மாடசுவாமியை தான். இப்பகுதியில் இதன் கோயில்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனகூறலாம், காவல்தெய்வமாக சுடலை மாடசுவாமியை கருதினாலும், ஆண்டுதோறும் இக்கோயில்களில் நடைபெறும் கொடைவிழாக்கள், பெரிய ஆலயங்களுக்கு இணையாக சிறப்பாக நடந்துவருகின்றது. ஏனெனில் கையிலையில் சிவபெருமான் மற்றும் பார்வதியிடம், நான் பூலோகம் செல்லவேண்டும் என்றால் எனக்கு ஊட்டு போட்டு, கொடைவிழா நடத்தவேண்டும் என்று அடம்பிடித்துவரம்வாங்கி, சுடலை மாடன்சுவாமி பூலோகம் வந்த நிகழ்வை கூறுகின்றனர்.